Tirunelveli Sodhi Kuzhambu Recipe: அதிக சத்துக்கள் நிறைந்துள்ள குழம்பு!

Advertisements

மிகக் குறைந்த செலவில் மிக குறைந்த நேரத்தில்  சுலபமாக அதிக சத்துகள் நிறைந்துள்ள ஒரு குழம்பு தான் சொதி குழம்பு.

இது மாப்பிள்ளை சொதி என்றும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி பகுதியில் திருமணத்திற்குப் பிறகு விருந்துக்காக தயாரிக்கப்படும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

சொதியில் பூண்டு ஒரு போதும் சேர்க்கப்படுவதில்லை வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை.

தேவையான பொருட்கள்;

பாசிப்பயிறு      -1 கப்
காய்கள்              – 1/2 கிலோ

இஞ்சி                   – 1 துண்டு
பச்சைமிளகாய் -5
தேங்காய் எண்ணெய் – 50 ml

முந்திரி                 – 5 கிராம்
கடுகு                    1 டீஸ்பூன்
எலுமிச்சை         1 டீஸ்பூன்

செய்முறை;

பாசிப்பருப்பை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
காய்கறிகளை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில்  வேக வைக்கவும்.
இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
இதனுடன் கடுகு, கறிவேப்பிலை, முந்திரி, கடுகு வதங்கும் வரை சிறிது வறுக்கவும்.

தேங்காய் பால், வேகவைத்த பருப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். அது கொதி நிலைக்கு வரட்டும்.

பருப்பு கொதித்ததும் காய்கறிகளைச் சேர்க்கவும்.

ஒரு நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் ஆற விடவும்.

இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியாக தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் . இப்போது சுவையான சொதி குழம்பு ரெடி..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *