Yashika Aannand: போலீஸ்காரர் மீது பகீர் கிளப்பிய யாஷிகா!

Advertisements

சென்னை: தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்து சோஷியல் மீடியாக்களிலும் தனது புகைப்படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா தற்போது குணமாகி, மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு பெரிய தமிழ் ஹீரோவை அப்பாவாக நினைத்ததாகவும் அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும் கூறியுள்ளார். ‘ஆடிஷனுக்கு அழைத்திருந்தார்.

ஸ்கிரீன் டெஸ்ட் செய்துவிட்டு, எனது படங்களை எடுத்தார். பிறகு வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு அம்மாவிடம் பேசினார். வாய்ப்பு தருவதாகக் கூறி படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார். அந்தச் சம்பவத்தின் மூலம் தான் சந்தித்த மன உளைச்சலிலிருந்து விடுபட்டேன்.

பின்னர் அவரால் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அவரின் பெயரை வெளியிடவில்லை. ‘ஒருமுறை எனது வீட்டின் அருகே ஒரு போலீஸ்காரர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அவர்மீது புகார் அளித்ததையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்’ என யாஷிகா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *