காசா அமைதி வாரியத்திலிருந்து கனடாவை நீக்கம் – டிரம்ப் அறிவிப்பு.!

Advertisements

காசா அமைதி வாரியத்திலிருந்து கனடாவை நீக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வாரியத்தில் இணைய ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இக்குழுவில், சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.

காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்தது.

இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், அமெரிக்காவின் ஆதரவால் கனடா வாழவில்லை என்றும் அதிபர் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, காசா அமைதி வாரியத்தில் இணைய கனடாவுக்கு விடுத்த அழைப்பை அதிபர் டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *