
துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தைக் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாகப் பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாகச் சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின்போது சந்திரசே
கரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது. இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாகச் சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்திச் சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியைத் தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்துப் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகத் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்குச் சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கா
மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

