டிக் டாக் செயலி பயன்படுத்துதல் சார்பாக அமெரிக்கா – சீனா உடன்பாடு

டிக் டாக் செயலி தொடர்ந்து அமெரிக்காவில் செயல்படுவதற்காக அமெரிக்காவும் சீனாவும் ஓர் உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளன.

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதற்கு 17 கோடிப் பயனாளர்கள் உள்ளனர்.

இந்தியாவில் தடை செய்ததுபோல் அமெரிக்க அரசும் அதன் உள்நாட்டுப் பாதுகாப்புக் கருதி, செப்டம்பர் 17ஆம் நாளுக்குள் அந்தச் செயலியின் செயல்பாட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும், அல்லது மூட வேண்டும் என்று கூறிக் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியின் அமெரிக்கச் சொத்துக்களை அமெரிக்க உரிமையாளர்களுக்கு மாற்றம் செய்துள்ளது.

இதையடுத்து டிக் டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்படுவதற்கு ஓர் உடன்படிக்கையை அமெரிக்காவும் சீனாவும் செய்துகொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *