Non-veg:இந்தியாவில் எந்த மாநிலத்தில் அசைவம் அதிகம் சாப்பிடுகிறார்கள் தெரியுமா..?

Advertisements

இந்தியாவில் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், எந்த மாநிலத்தில் அசைவம் அதிகம் சாப்பிடுகிறார்கள் தெரியுமா..?

இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. மீன், கோழி, ஆடு போன்ற பலவகையான அசைவ உணவை மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

அசைவம் சாப்பிட யாருக்கு தான்பிடிக்காது..! உங்களுக்குத் தெரியுமா.. இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவைத் தான் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களில், அசைவத்தை விரும்பிச் சாப்பிடும் மக்கள் அதிகம் உள்ளன. ஆனால், எந்த மாநிலங்களில் அசைவம் அதிகம் சாப்பிடுகிறார்கள் தெரியுமா.. பட்டியல் இங்கே..

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நாகாலாந்து தான். இங்கு 99.8 சதவீத மக்கள் அசைவம் தான் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மேற்கு வங்களம் உள்ளது. இங்கு 99.3 சதவீதம் பேர் அசைவம் தான் சாப்பிடுகிறார்கள்.

மூன்றாம் இடத்தில் கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில் 99.1 சதவீதம் மக்கள் அசைவம் தான் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் ஆந்திரா மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கு 98.25 சதவீதம் பேர் அசைவம் தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

ஐந்தாவது இடத்தில் தான் நம்முடைய மாநிலமான தமிழ்நாடு உள்ளது. இங்கு 97.65 சதவீதம் மக்கள் அசைவம் தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *