“நாளை முதல் அமைச்சரவைக் கூட்டம்” – முதல்வரின் அதிரடி முடிவுகள் என்ன.?

Advertisements

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *