எதிர்க்கட்சிகள் மீது பழியா? .. விளாசும் பெரியகருப்பன்..!

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை குறித்து தாங்கள் பேசினால், எதிர்க்கட்சிகள் வழக்கம்போல குறை கூறுவதாக ஆளுங்கட்சியினர் திசை திருப்புவார்கள் என திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காந்தி சிலை அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 ஆவது பிறந்த நாள் விழா திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை முதல்வர் விஜய் முறையாக நடத்துவதில்லை என்று பத்திரிகையாளர்களே வெளிப்படையாகக் கூறுவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் மதிப்பிட வேண்டும்.

ஏனென்றால், நாங்கள் கூறினால், எதிர்க்கட்சிகள் வழக்கம்போல குறை கூறுகின்றன என்று சொல்வார்கள் எனக் கூறினார். மேலும், முதல்வர் விஜய் திமுகவை ஏன் விமர்சிக்கிறார் என்பதை அவரிடமே கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *