
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சாதகமான முறையில் முன்னேறி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சாதகமான முறையில் முன்னேறி வருவதாகக் கூறினார்.
மேலும், இந்த வார இறுதிக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்று தெரிவித்தார். லெபனானில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் இருந்து, ஈரானுடனான பேச்சுவார்த்தையைத் தனித்துப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.
லெபனானில் வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா சமீபத்தில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நேரடித் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார்.


