
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வெரையூர்-தண்டரைச் சாலைகளை இணைக்கும் வகையில், உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டன.
துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்களைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் இருந்த 1281 தரைமட்ட பாலங்களில், 1191 பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாகக் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பொதுப்பணித் துறையில் உள்ள அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் தான் பொதுப்பணித்துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் முதலமைச்சர் உடனுக்குடன் நிதி அளிப்பதால் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



