
செங்கல்பட்டு மாவட்ட பா.ம.க. நிர்வாகி இளந்தோப்பு வாசு கொல்லப்பட்டது தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு வாசு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவரான செல்வாக்கு மிக்க அவரைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்குலைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வாசுவின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைத் தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாகக் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



