சென்னை வில்லிவாக்கத்தில் டிஃபன் பாக்சில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில் அதிர்ச்சி. டிபன் பாக்ஸில் இருந்த நாட்டு வெடிகுண்டு. அலறிய போலீஸ்.. சிக்கிய ரவுடி.!
சென்னை வில்லிவாக்கம் கணவன் மனைவி இடையே தகராறில் கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வில்லிவாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியோடு இருந்த நபரை பிடித்தனர்.
சென்னை வில்லிவாக்கம் கணவன் மனைவி இடையே தகராறில் கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வில்லிவாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியோடு இருந்த நபரை பிடித்தனர். பின்னர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது வீட்டிலிருந்த டிபன் பாக்ஸ் ஒன்றை போலீசார் திறக்க முயன்றனர்.
அப்போது அதில் நாட்டு வெடிகுண்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை பிடிக்க முயன்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை போலீசார் மீண்டும் அதே வீட்டில் சோதனை செய்த பொழுது இரண்டு டிபன் பாக்ஸ்களில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி (27) என்பதும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தனது உயிருக்கு எதிரிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.