அதிமுக கட்சி பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை!
அதிகார மோதல் காரணமாக 4 பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதனையடுத்து நடைபெற்ற சட்ட போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் என ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார். மேலும் அதிமுக கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தி வந்தார். இதற்கு அதிமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.