

அன்புள்ள துலா ராசி நேயர்களே:
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் புதன், மாத முற்பாதியில் 11&ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்க கூடிய அமைப்புகள், எடுத்த காரியத்தைக் குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் உண்டாகும்.
தொழில் வியாபார ரீதியாகப் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த தேக்கங்கள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும், லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும்.
ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து எடுக்கும் காரியங்களைத் தடையின்றி செய்து முடிப்பீர்கள்.
கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.
அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் சாதகமான பலன் உண்டாகும்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
பரிகாரம்:
முருக வழிபாடு செய்வதாலும், விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதம் இருப்பதாலும் மேன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 05-09-2023 மாலை 03.00 மணி முதல் 07-09-2023 இரவு 11.13 மணிவரை.


