Sep 2023 Monthly Rasi Palan: கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

Advertisements


அன்புள்ள கன்னி ராசி நேயர்களே:

 

ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன், 8-ல் குரு- ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும்.

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது சிறப்பு.

கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை குறையும்.

விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும்.

பண வரவுகள் தேவைக்கு ஏற்றப் படி இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் குரு சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படவும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காத காரணத்தினால் எதிலும் நீங்களே முன்நின்று செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்க்கவும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம்:

சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்- 03-09-2023 காலை 10.38 மணி முதல் 05-09-2023 மாலை 03.00 மணிவரை மற்றும் 30-09-2023 இரவு 09.10 மணி முதல் 02-10-2023 இரவு 12.15 மணிவரை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *