
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே:
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள்
நினைத்ததெல்லாம் நடக்கும்.
குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான
பலன்கள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 7-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலப் பலன்களை அடையலாம்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும்.
பூர்வீகசொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான
நிலை இருக்கும்.
எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கிடைக்க வேண்டியவாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும்.வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களும் திரும்பக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
பரிகாரம்:
புதன், வெள்ளி போன்ற நாட்களில் மகாலட்சுமி தேவிக்கு பூஜை செய்து
வழிபடுவது, செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கு போட்டு வழிபடுவது
மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் -20-09-023 காலை 08.45 மணி முதல் 22-09-2023 மாலை 03.35 மணி
வரை.


