

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே:
ராசியாதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதும் இம்மாதத்தில் 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். ராகு 6-ல் இருப்பதால் உங்களுக்குள்ள சகலவித பிரச்சினைகளும் விலகும் அமைப்பு, எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் பலம் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தற்போது இருக்ககூடிய நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது, வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள்.
இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும்.
கடன்களும் ஓரளவு குறையும். அரசு வகையில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைவதுடன் எடுத்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து நல்ல பெயர் எடுக்க முடியும். ஒருசிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
பரிகாரம்:
சனிப்ரீதியாக விநாயகருக்கு அருகம்புல் மாலையும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறைந்து வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம்- 07-09-2023 இரவு 11.13 மணி முதல் 10-09-2023 காலை 10.25 மணிவரை.

