மற்றவர்களின் சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது – மு.க.ஸ்டாலின் பேச்சு..!

கூட்டணி கட்சிகளில் குழப்பம் நினைப்பவர்களின் சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, எல்லோரும் ஓய்வு இல்லாமல், தேர்தல் பணிக்கு தயாராக  வேண்டும். பின்னர், கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.

எனவே, தேவையில்லாத கருத்துகளைப் பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். இதில், நாம் யாரும் பலியாகக் கூடாது என்று கூறினார்.

மேலும், தேர்தல் வருகிறது நடவடிக்கை எடுக்க மாட்டார் என யாரும் நினைக்கக்கூடாது என்றும், தனி நபர்களை விட கட்சி தான் பெரிது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *