தென் ஆப்பிரிக்காவில் விபத்தில் சிக்கி 13 பேர் பலி..!

Advertisements

தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில், லாரி மீது பள்ளி வேன் மோதிய கோர விபத்தில்,  மாணவ-மாணவிகள் 13 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு, மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு, இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது.

அந்த வேனில் 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயணித்தனர். இந்நிலையில், வெண்டர்பிஜில்பார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் எதிரே வந்த லாரி மீது, பள்ளி வேன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில், பள்ளி வேனில் பயணித்த மாணவ-மாணவிகள் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து, விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவ-மாணவிகள் 11 பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *