Viagra:’வயாகரா’ குறித்த புதிய ஆய்வு.. மருத்துவ உலகையே புரட்டிப்போடும் முடிவுகள் வெளியீடு!

Advertisements

ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்தான வாயாகரா குறித்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சில்தெனாபில் (Sildenafil) என்ற மருத்துவப் பெயருடைய இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரான வாயாகராவே மருந்தின் பெயராக வெகுஜனத்தின் மத்தியில் அறியப்படுகிறது.

Advertisements

வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் நியாபக மறதி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் வயாகரா குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நியாபக மறதி மருத்துவத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நியாபக மறதி மொத்தம் இரண்டு வகைப்படும். ஒன்று, மூளையில் படியும் Amyloid பீட்டா படிமங்கள் நியூரான்களின் தொடர்பைத் துண்டிப்பதால் ஏற்படும் அல்சைமர் நியாபக மறதி, மற்றோன்று முன்கூறிய வாஸ்குலார் நியாபக மறதி. இந்தியாவில் அல்சைமர் நியாபக மறதியை விட வாஸ்குலார் நியாபக மறதியே அதிகம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *