மும்பை: வரலாறு காணாத அளவில், 85 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து மும்பை சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டது.
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் இன்று (செப்.,24) இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. நேற்று வர்த்தக நேர முடிவில் 84,863 புள்ளிகளுடன் நிறைவடைந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்து உயர்வை நோக்கிச் சென்றது. 85,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம் தொட்டது.
சென்செக்ஸ் முதன்முறையாக 85,000 புள்ளிகளைத் தொட்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மும்பை பங்குச் சந்தை எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டிய நிலையில் நிப்டியும் 26,000 புள்ளிகளை நெருங்குகிறது. டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் மற்றும் பவர்கிரிட் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின. நிப்டி இன்று 10.30 மணியளவில் 25.975 என்ற புள்ளியை எட்டி இருந்தது.

