
தொண்டியில் பழமை வாய்ந்த 13ம் நூற்றாண்டை சேர்ந்த அருள்மிகு உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கபட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு உந்தி பூத்த பெருமாள் கோயில் உள்ளது. இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் காட்சியளிக்கிறார். 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயிலில் இதுவரை கொடிமரமே இல்லாமல் இருந்தது. இதனால் பக்தர் கொடிமரம் வைக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று புதிதாககொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று அறநிலைத்துறை அதிகாரிகள் தலைமையில் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் சிறப்பு பூஜைகள் செய்து செம்பு தகடு மீது தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தின கற்கள் ஆகியவற்றை கொடுமர குழியில் வைத்து பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு 36 அடி உயரமுள்ள கொடிமரம் அமைக்கபட்டது. தொடர்ந்து நாளை கொடிமரத்திற்கான சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பக்தர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.கோரிக்கையை ஏற்று கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

