Virudhachalam: மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய காவல்துணை கண்காணிப்பாளர்!

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேசை பந்து அரங்கத்தை. காவல்துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியர் கீதாஞ்சலி ஆகியோர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900. க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு, கால்பந்து கையுந்து பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டு தோறும் மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பள்ளியில் மேசை பந்து அணி உருவாக்கப்பட்டு பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் அவர்கள் போதுமான அரங்கு இல்லாததால் மாணவர்கள் மற்றும் பயிற்சி தரும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இதனைப் பற்றி அறிந்த விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்யராஜ் பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கு அமைக்க தம்மால் இயன்ற நிதியுதவி செய்வதாகவும், ஆசிரியர்கள் அதற்கான பணிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.இதனையடுத்து பள்ளி வளாகத்தில் தனிவகுப்பறை ஒன்றை ஒதுக்கி அங்கு உள் மேசை பந்து விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அரங்கினை பார்வையிட்டு பயிற்சி பெறும் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்குவித்து, பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து.காவல்துனை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ். மூத்த முது கலை ஆசிரியர் கீதா ஞ்சலி ஆகியோர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்று மாவட்ட, மாநில அளவில் வெற்றியை பள்ளிக்கு பெற்று தருவதே தமக்கு பெருமை என கூறினார்கள்.

இந்த நிகழ்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஜீவன்,NSS ராமச்சந்திரன், ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி தனபால் மற்றும் பல ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர்.

மேலும் வரும் பிப்ரவரி மாதம் 2 முதல் 7 ஆம் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெறக்கூடிய மாநில அளவிலான மேசைப்பந்து விளையாட்டு போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *