
சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வைச்சந்தித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் 100% ஒப்புகைச்சீட்டை இணைக்க வலியுறுத்திக் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்..மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது என்ற அச்சம் பொது மக்களிடையே வெளிப்படுகிறது, எனவே பழைய வாக்குச் சீட்டு முறையையே மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒரு சில நாட்களை இடைவெளியுள்ள நிலையில் 100% ஒப்புகை சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
தேர்தல் ஆணையர் நியமனக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக ஒன்றிய அரசுச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒரு சில நாட்களை இடைவெளியுள்ள நிலையில் 100% ஒப்புகை சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையர் நியமன குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது எனத் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.


