
பொன்னேரி அருகே பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவின்போது வானத்தில் கழுகு வட்டமிடதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆமூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.
இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்துக் கடந்த 3 நாட்களாகக் கணபதி ஹோமம், கோப்பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாகக் கால பூஜைகளை நடத்தினர்.
தொடர்ந்து புதிய சிலைகள் பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.கும்பாபிஷேக விழாவின்போது வானத்தில் கழுகு வட்டமிடதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
இதனையடுத்து அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் துணைத் தலைவர் அந்தோணி ரஞ்சித் குமார் உதயகுமார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் சாமி வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

