Gayathri Raghuram: அதிமுகவில் இணைந்தார்!

Advertisements

பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை: தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தார். இதனால் பாஜக மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாகக் காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிரடியாக அறிவித்தார்.இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் இன்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.

காயத்ரி ரகுராம் அதிமுக கட்சியில் இணைந்ததை உறுதி செய்யும் விதமாக,  அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது… “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு எடப்பாடி கேப்பழனிச்சாமி அவர்களை, இன்று 19.01.2024 சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ‘செவ்வந்தி’ இல்லத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் பேத்தியும், மறைந்த நடன இயக்குனர் திரு. ரகுராம் மாஸ்டர் அவர்களது புதல்வியுமான செல்வி காயத்ரி ரகுராம் அவர்கள் இன்று கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தாரென அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *