தவெக-வுக்கு விசிக ஆதரவு தருமா?

Advertisements

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எடுக்க உள்ள முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வேளச்சேரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,

“இன்று மாலை 5 மணிக்கு விசிக உயர்நிலைக் குழுக் கூட்டத்தை கூட்டி இணையவழியாக ஆலோசனை நடத்த இருக்கிறோம். கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் இருந்தாலும் கூட, நிர்வாகிகளின் உணர்வுகளும் கருத்துகளும் மிகவும் முக்கியமானவை.தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தருவது தொடர்பாக கடிதம் எழுதப்பட்டு பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இன்று என்ன ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறீர்கள்  என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மாவட்ட செயலாளர் பிறந்தநாளை ஒட்டி ஜனநாயக முறைப்படி கட்சிகள் கலந்து பேசுவது என்பது வழக்கமான ஒன்றுதான்.

எந்த ஒரு முடிவாக இருந்தாலும், கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, அவர்களின் கருத்துக்களை அறிய வேண்டியது, அவர்களுடைய உறவுகளை மதிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.

இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் இருக்கிறார்கள். திடீரென்று நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இன்று மாலை இணையவழியாக பேச இருக்கிறோம்.

அதிமுக, திமுக ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஏற்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது, கலந்து பேசாமல் கருத்து சொல்வது சரியல்ல. எங்களுடைய தோழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியாமல் நானே ஒரு அழைப்பை முன்கூட்டியே சொல்ல முடியாது.

மறுபடியும்  சொல்கிறேன், உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிந்த பிறகு நாளை காலை செய்தியாளர்களை அழைத்து நாங்கள் பேச இருக்கிறோம். உயர்நிலைக் குழுவில் எடுக்கக்கூடிய முடிவை அறிவிப்போம்.

திமுக தலைவர்  மு..ஸ்டாலின் உங்களை சந்தித்து பேசினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்…, ‘நாங்கள் ஏற்கனவே மதச்சார்பற்ற கூட்டணியை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த கூட்டணிக் கட்சிகளை சார்ந்த தலைவர்களே என்ற முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசினோம்.

இந்த கூட்டணி மக்கள் தீர்ப்பை மதிக்கிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம்.

மக்களுடைய தீர்ப்பிற்கு தலைவணங்க வேண்டியது தங்களுடைய கடமை என்று எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அந்த கருத்துக்களைத் தான் நாங்கள் பகிர்ந்து கொண்டோம்’ என்றார்.

‘தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இடையூறாக இருக்க மாட்டோம் என்று திமுக தலைவர் தொடர்ந்து கூறி வரும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தால் அதற்கும் இடையூறு தராமல் இருப்பாரா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ‘என்னுடைய நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை.

நிலைப்பாடு எடுக்காத நிலையில் வியூகமான கேள்விகளை கேட்கிறீர்கள். அது சரியல்ல. உயர்நிலைத் தலைவர்களுடன் கலந்து பேசிய பிறகு நாங்கள் எடுக்கின்ற முடிவையொட்டி நீங்கள் கேள்விகளை கேட்கலாம்’ என்று தெரிவித்தார்.”
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *