ஈரானின் வீழ்ச்சிக்கு நான் தான் காரணம் – டொனால்டு டிரம்ப் பேச்சு.!

ஈரானைத் தான் வீழ்ச்சியின் விளிம்புக்குக் கொண்டு சென்றதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஈரானைத் தான் வீழ்ச்சியின் விளிம்புக்குக் கொண்டு வந்துவிட்டதாகவும் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்காவையும் மிகுந்த மரியாதையுடன் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், அமெரிக்க செனட் சபை மிகவும் தவறான நேரத்தில், அர்த்தமற்ற ‘போர் அதிகாரச் சட்ட’ வாக்கெடுப்பை நடத்தியுள்ளது என்று கூறியுள்ளார். இதன் மூலம், உலகின் முதன்மையான பயங்கரவாத ஆதரவு நாடான ஈரானிடம், தான் எதிராகச் செயல்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு ‘தோல்வியாளர்கள்’ ‘டம்மோக்ராட்ஸ்’ உடன் இணைந்து வாக்களித்தனர் என்று குற்றம் சாட்டினார். உறுப்பினர்கள் தன் பணியை மேலும் கடினமாக்கியுள்ளனர் என்றும், ஆனாலும் தான் இந்தச் செயலை முடித்துக்காட்டுவேன் என்றும் தற்பெருமையுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *