Advertisements

திமுக தயவோடு அதிமுக ஆட்சி அமைவதாகப் பரவும் செய்திகள் வெறும் வதந்தி என்பதால் அதற்குத் தன்னால் பதிலளிக்க முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறினார். இது மக்களின் தீர்ப்பு, எனவே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், திமுக தயவோடு அதிமுக ஆட்சி அமைவதாகப் பரவும் செய்திகள் வெறும் வதந்தி என்பதால் அதற்குத் தன்னால் தன்னால் பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
Advertisements


