கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழஞ்சலி!

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழ்வணக்கம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசனுக்குப் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிசங்களாக  அவரது படைப்புகள்  திகழ்வதைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின்  புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *