ராமதாசுக்கு கல்தா: திருமாவுக்கு அமைச்சர் பதவி: மு க ஸ்டாலின் அதிரடி.!

Advertisements
தமிழக அரசியலில் குட்டையை குழப்பம் வேலைகள் உச்சகட்டமாகவே நடைபெற்று வருகின்றன . இதுவரை இல்லாத அளவிற்கு புதிய கூட்டணிகள் அமைப்பதில் அனைத்து முன்னணி கட்சிகளும் திரை மறைவு வேலைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் யாருடன் கூட்டணி வைப்பது என்ற கொள்கை முடிவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டு இரண்டாக உடையும் சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது .
மருத்துவர் அன்புமணியை பொறுத்தவரையில் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டார் தனது கட்சியை சேர்ந்த யாராவது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்கிற கோரிக்கை மட்டும் பஞ்சாயத்தில் இருக்கிறது. மற்றபடி அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது . இதே சமயத்தில் மற்றொரு பக்கம் மருத்துவர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்படுகிறார் இது தொடர்பாக அவர் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு உள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்ததால்தான் அன்புமணி அவருக்கு எதிராக போர் கொடி பிடித்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில் திமுக மேலிடம் பாட்டாளி மக்கள் கட்சி வருகை குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது அந்த ஆலோசனை கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ப்பதால் தங்களுக்கு பின்னடைவு தான் ஏற்படும். ஏனென்றால் தொல் திருமாவளவன் மிகத் தீர்க்கமாக இருக்கிறார் . பாட்டாளி மக்கள் கட்சியை சேர்த்துக் கொண்டால் நாங்கள் விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறி இருக்கிறார்.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் நமது கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என முடிவு எடுக்கப்பட்டு ராமதாஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது . அதே சமயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தம்மை விட்டு எங்கும் போய்விடாது என்பதில் மு க ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார் கடந்த ஆறு ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பணியாற்றி வருகிறது .
ஏற்கனவே தொல் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதாக மு க ஸ்டாலின் முன் வந்தார் ஆனால் அதனை திருமாவளவன் ஏற்றுக்கொள்ளவில்லை .
இந்த முறை நடைபெறும் தேர்தலில் திமுக ஆட்சியில் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவது என மு க ஸ்டாலின் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது தொல் திருமாவளவனும் இந்த முறை மு க ஸ்டாலின் உத்தரவை ஏற்றுக் கொள்வார் என்றே தெரிகிறது
எனவே ,  திமுகவில் ராமதாசுக்கு இடமில்லை என்பதும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் இணைந்து பணியாற்றும் என்பதும் தொல் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி என்பதும் உறுதி செய்யப்பட்ட தகவலாக தெரிகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *