2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடக்கம் முதல்வர் அறிவிப்பு..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாட்டில், குழந்தைகளின் கல்வி மற்றும் சீரான வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்தக் குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் வகையில், அன்புக்கரங்கள் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், மாணவர்களின் பள்ளி, கல்லூரி கல்வி முடியும் வரை மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வழிவகைச் செய்துள்ளனர். பின்னர், சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் அவர், பெற்றோர் இருவரையும் இழந்து 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும் வழங்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *