தனியார் பள்ளிகளுக்கு அரசாங்க அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் இருதரப்பு தீவிர வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே, அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.



