தொல் திருமாவுக்கு துணை முதல்வர் பதவி: எடப்பாடியார் தூது விட்ட விவகாரம்..! 

Advertisements
வருகிற தேர்தலில் கூடுதல் சீட் தருகிறோம் உங்களுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம் என தொல் திருமாவளவனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆசை காட்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது . சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன ஆனால் அதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் தேர்தல் அலை வீச ஆரம்பித்து விட்டது
குறிப்பாக இந்த தேர்தலில் கூட்டணி குழப்பங்கள் உச்சகட்டமாக அரங்கேறி வருகின்றன . ஆட்சியைப் பிடிப்பதற்காக கொள்கைகள் அனைத்தையும் மறந்து எப்படியாவது கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றன
அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என அதிமுக திரை மறைவு வேலைகளை செய்து வருகிறது
இந்த நிலையில் தொல் திருமாவளவன் அதிமுகவை ஆதரித்தால் அவருக்கு துணை முதல்வர் பதவி மற்றும் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆசை காட்டடியதாக தெரிகிறது . இந்த விவகாரம் குறித்து தொல் திருமாவளவனே பொதுக்கூட்ட மேடை ஒன்றில் உடைத்தெறிந்து பேசியிருக்கிறார்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது எங்களுக்கு தேர்தல் முதன்மையானது கிடையாது மதச்சார்பின்மையை பின்பற்றுவது திமுக கூட்டணி தான் அதனால்தான் அங்கு இருக்கிறோம் சில கட்சிகள் இன்னும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை
 ஏன் முடிவு எடுக்கவில்லை என்றால் லாப நட்ட கணக்குகளை பார்த்துவிட்டு லாபம் எந்த பக்கம் இருக்கிறதோ அங்கு சென்று விடுவார்கள் ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிவு எடுத்து விட்டது நாங்கள் லாபமோ நஷ்டமோ பார்ப்பதில்லை மதச்சார்பின்மை கொள்கைதான் எங்களுக்கு முக்கியம்
பாரதிய ஜனதா கட்சி மிகச்சிறந்த தீய சக்தி பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்து விட்டால் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டுவார்கள் அனைத்து மாநிலங்களிலும் இதைத்தான் பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது . திமுக கூட்டணியை உடைப்பதற்கு தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அழைக்கிறார்கள்
எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம் கூடுதல் சீட்டு தருகிறோம் எனக் கூறி வருகிறார் யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்துதான் எடப்பாடி பழனிச்சாமி எங்களை கூட்டணிக்கு அழைக்கிறார் . நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டோம் திமுகவுடன் தான் எங்களது கூட்டணி நீடிக்கும் என திருமாவளவன் அந்த பொதுக்கூட்ட மேடையில் பரபரப்பாக பேசியுள்ளார்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *