எடப்பாடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக கலவரம்..!

Advertisements
ஒட்டுமொத்த இந்தியாவிலும் தற்போது தமிழகத்தில் தான் மிகப்பெரிய அரசியல் அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய வெடிகுண்டை வீசி இருக்கிறது .
வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுஅதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக் கொண்டாலும் கடந்த இரண்டு மாதங்களாகவே உள்குத்து மோதல்கள் உச்சகட்ட அளவில் நடைபெற்று வருகின்றன . இந்த போதலுக்கு முதல் முதலாக திரி வைத்து பற்ற வைத்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்க்ஷா
அவர் பேசும்போது வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று ஒரு பட்டாசை கொளுத்தி போட்டார். இதனைத் தொடர்ந்து அப்படி என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் இல்லையா? என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமியும் பதிலடி கொடுத்து வந்தார் . அதே வேளையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்தார் . உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு அதிலிருந்து எந்தவித மாற்றமும் கிடையாது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என ஆணித்தரமாக பேசி வந்தார்
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வேட்டு வைக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசும்போது மிக காரசாரமாகவே பேசினார் . ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை என்று பேசினார்
அவரது இந்த பேச்சு பாரதிய ஜனதா கட்சி தலைமை நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்து நயினார் நாகேந்திரன் பேசும்போது எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கத்துடன் பேசவில்லை இது தொடர்பாக நான் அவரிடம் தொலைபேசியில் பேசி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்
அதே வேளையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அண்ணாமலையின் பேச்சு அதிரடியாக அமைந்திருக்கிறது . எடப்பாடி பழனிச்சாமியின் இந்த ஏமாளி பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசும் போது நைனார் நாகேந்திரனையும் ஒரு பிடி பிடித்து இருக்கிறார்
செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசும்போது நான் பதவிக்கு பின்னால் போய் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காய பதவிதான் உரித்து உரித்து பார்த்தால் அதன் உள்ளே ஒன்றும் இருக்காது . பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் யாரையும் ஏமாற்றுகிற கட்சி கிடையாது அதே நேரத்தில் ஏமாறக்கூடிய கட்சியும் கிடையாது நாங்கள் யாரையும் அடித்து புடுங்கவும் மாட்டோம் எந்த கட்சியையும் பாஜக கீழே தள்ளிவிட்டு வளர வேண்டும் என விதைக்காது
தமிழ்நாட்டில் ஒரு கட்சி தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியுமா என்பது தெரியவில்லை திமுகவும் தனியாக ஆட்சி அமைக்குமா என்பதும் தெரியாது . கடந்த 1980 முதல் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளுமே கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்றிருக்கின்றன தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை அதே சமயம் எங்களையும் யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் ஆகையால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேசக்கூடாது என அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்
இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போர் குரல் எழுப்பி வருகின்றனர் . அதிமுகவுக்கு ஓட்டு போட நாங்களும் முட்டாள்கள் இல்லை என அவர்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் இந்த போர்க்கொடி பிடித்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது அவர்கள் கூறும் பொழுது பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் அண்ணா திமுகவால் ஜெயிக்க முடியாது குறிப்பாக 75 தொகுதிகளில் கூட அதிமுக டெபாசிட் வாங்க முடியாது
இந்த நிலையில் எடப்பாடியை முதல்வராக்கி அழகு பார்ப்பதற்கு சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் பாஜகவினர் எவனும் முன்வர மாட்டான் பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து டெல்லி பாஜக மேல் இடம் ஒரு விவாத கூட்டம் நடத்தி இருக்கிறது அதில் அதிமுக பாஜக இடையே மேலும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி அண்ணாமலைக்கும் நைனார் நாகேந்திரனுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நைனார் நாகேந்திரன் வீட்டில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஒரு விருந்து நடைபெறுகிறது இந்த விருந்தில் அதிமுக தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விருந்து வெறும் சைவ விருந்து தான் இருந்தபோதிலும் 40 வகையான உணவுகள் இடம்பெறுகின்றன. இந்த விருந்தின் போது அனைத்து பாஜக முன்னணி தலைவர்களும் அதிமுக தலைவர்களும் ஒன்று கூடி சமரசமாக பேசுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பது திரை மறைவு செய்தி ஆகும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *