செனகல் நாட்டில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக்ஸ் தொடரின் பெண்களுக்கான 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவின் தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
செனகல் நாட்டின் தலைநகரமான டகாரில், இளையோர் ஒலிம்பிக்ஸ் தொடரின் பெண்களுக்கான 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தினிதி தேசிங்குச் சிறப்பாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் யூத் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தினிதி தேசிங்குப் படைத்தார்.
மேலும், இந்த யூத் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



