பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை தன்வி பத்ரி அபார சாதனை.!

இளையோர் ஒலிம்பிக்ஸ் தொடரின் பெண்களுக்கான பேட்மிண்டனில் இந்தியாவின் தன்வி பத்ரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்…
செனகல் நாட்டின் தலைநகரமான டகாரில், இளையோர் ஒலிம்பிக்ஸ் தொடரின் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சீனாவின் ஜாங் இ சின், இந்தியாவின் தன்வி பத்ரி உடன் மோதினார்.
இதில், சிறப்பாக விளையாடிய ஜாங் இ சின் 15-21, 21-13, 26-24 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.இந்தியாவின் தன்வி பத்ரி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை தன்வி பத்ரி படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *