ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், வனவாசம் தொடங்கிய பிறகு அமைதியும் கம்பீரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குநர் ராஜமவுலி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் ரன்பீர் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், ராமாயணா படம் முதல்நாளில் 64 கோடியே 85 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, படத்தின் காட்சிகளையும் நடிகர்களின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில், ராமாயணா படத்தின் பிரம்மாண்டம், திரையரங்குகளில் பார்க்கும்போது அதன் காட்சிகள் அற்புதமாக உள்ளது என்று கூறினார்.. ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், குறிப்பாக வனவாசம் தொடங்கிய பிறகு அமைதியும் கம்பீரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்டமான படைப்பை அழகாக திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


