Theni: டாஸ்மாக் கடைகள் மூடல்!

Advertisements

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்படுகிறது.

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகிற 28-ந்தேதி மிலாடி நபி தினம் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வருகிற 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி ஆகிய நாட்களில் தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற பார்கள் கட்டாயம் மூடப்பட வேண்டும். அன்றைய நாட்களில் மது விற்பனை எதுவும் மேற்கொள்ளக் கூடாது. விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

One thought on “Theni: டாஸ்மாக் கடைகள் மூடல்!

  1. இரண்டு நாட்கள் wine ஷாப் மூடினால் ஒன்றும் நடக்காது. ஏன் என்றால் இரவு முழுவதும் எபோதும் சரக்கு வியாபாரம் நடந்துகொண்டுதான் உள்ளது. கடை மூடினால் இரண்டு மடங்கு கொடுத்து குடிக்க வேண்டிய நிலைமை வரும். அப்போ பொது மக்களுக்குதான் தாண்ட செலவு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *