Seelaikari Amman Temple: வெகுவிமரிசியாக நடந்த சீலைக்காரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்!

Advertisements

சின்னமனூர் அருகே முத்துலாபுரத்தில் ஸ்ரீ சீலைக்காரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெரு விழா நடைபெற்றது.இதில்  ஏராளாமன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே முத்துலாபுரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சீலைக்காரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா விழா நேற்று மாலை வேலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கபட்டு மஹா சங்கல்பம் புன்னியாஜனம், வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி , கலாகர்ஷணம், யாகசாலை பிரவேஷம், முதல்கால யாகச் சாலை 4 கால பூஜைகளை ஐயப்பன் கோவில்மேல் சாந்தியினர் வேத மந்திரம் ஓத நடைபெற்றது.

இதையடுத்து இன்று காலைக் கடம் புறப்பாடாகி கோவில் கோபுரத்தில் பல்வேறு ஸ்தலங்களிலிருந்து புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு புனிதநீர் கும்ப கலசத்தின் மீது ஐயப்பன் கோயில்மேல் சாந்தியினரால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து பக்தர்கள்மீது கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேகத்தில் முத்துலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காலை முதல் மாலைவரை சீலைக்காரி அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர், இவ்விழாவை பெரிய பொன்னுத்தேவர், சின்னப் பொன்னுத்தேவர், சிவராமுத்தேவர், மற்றும் ராமசாமித்தேவர், வகையராவை சேர்ந்த பங்காளிகள், ஏற்பாடு செய்திருந்தனர்,

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *