
இந்தியாவுக்கு 2 வது தங்கம்! மகளிர் அணி அசத்தல்.
ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணி இன்று தங்கத்துடன் தனது பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது. தற்போது வரை 11 பதக்கங்களை(2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம்) இந்தியா வென்றுள்ளது.
ஹாங்சோவ்: 9-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடரின் மூன்றாவது நாளான இன்று இந்தியா தங்கத்துடன் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது.இந்திய அணி தற்போது வரை 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 6வது இடம் பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைக்குமா? ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணிக்கு 2-வது தங்கம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில். மகளிர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியைத் தோற்கடித்து இந்திய அணி தங்கம் வென்றது. 117 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்த நிலையில், 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்தித் தங்க பதக்கத்தைத் தட்டி சென்றனர்.இதன்மூலம் தற்போது வரை 11 பதக்கங்களை(2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம்) இந்தியா வென்றுள்ளது.
குத்துச்சண்டை பெண்கள் 60-60 கிலோ ரவுண்ட் ஆப் 32 பிரிவில் சீன வீராங்கனையிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை அருந்ததி தோல்வியடைந்தார். குத்துச்சண்டை ஆண்கள் 46-51 கிலோ ரவுண்ட் ஆப் 32 பிரிவில் இந்திய வீரர் தீபக் வெற்றிபெற்றார். மலேசிய வீரரை 0-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் தீபக் வெற்றிபெற்றார்.
வுஷூ வுஷூ போட்டியில் பெண்கள் 60 கிலோ பிரிவில் காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தேவி அபார வெற்றிபெற்றார் 25 செப்டம்பர் 2023 5:09 நீச்சல்: நீச்சல் போட்டி ஆண்கள் 50 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 6ம் இடம் பிடித்தார். இதன் மூலம் பதக்க வாய்ப்பை ஸ்ரீஹரி இழந்தார். இப்போட்டியில் சீன வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.
செஸ்: செஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4ம் சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் குமார் – ஈரான் வீரர் சையது மோதிய போட்டி சமனில் முடிந்தது. இரு வீரர்களும் தலா 0.5 புள்ளிகள் பெற்றதால் போட்டி சமனில் முடிந்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வியட்நாம் வீரரை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் விடிட் சந்தோஷ் வெற்றிபெற்றார்.
செஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4ம் சுற்றில் சீன வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை ஹம்பி 0-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார் இதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹரிகா – உஸ்பெகிஸ்தான் வீராங்கனை நிலுபர் இடையேயான போட்டி 0.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.
செஸ்:- செஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3ம் சுற்றில் வியட்நாம் வீரரை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் அர்ஜுன் குமார் வெற்றிபெற்றார். இதே பிரிவில் மற்றொரு போட்டியில் தாய்லாந்து வீரடை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் விடிட் சந்தோஷ் வெற்றிபெற்றார். செஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3ம் சுற்றில் சீன வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை ஹரிகா 0-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார் இதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி – சீன வீராங்கனை ஜினிர் இடையேயான போட்டி 0.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

