இன்று கோவை, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..!

Advertisements

இன்று கோவை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். நாளை கோவை, நீலகிரி, இராமநாதபுரம் , சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

மே 16ஆம் நாள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் 2 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *