
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று, தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் ராஜா முத்துப்பாண்டியின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடரட்டும் என டி.டி.வி.தினகரன் வாழ்த்தியுள்ளார்.



