Sexual harassment: நெய்யை புடைத்த போலிசார்!  

Advertisements

பாலியல் தொல்லை கொடுத்த காமுகர்களை நெய்யை புடைத்த போலிசார்!

புதுச்சேரியில் சககோதரியுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண்ணை அடைக்களம் தருவதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாக்குமாரியை சேர்ந்த 22 வயதுடைய பெண் புதுவை திப்புராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்னர் தனது அக்காவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக அவர் ஆட்டோ ஒன்றில் புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார்.

ஆனால் ஊருக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால் எங்குச் செல்வது எனத் தெரியாமல் குழம்பியுள்ளார். அந்தப் பெண் குழம்பியதை அறிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணை முதலியார்பேட்டை அனிதாநகர் பெட்ரோல் நிலையம் அருகே அழைத்து வந்து, அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்தப் பெண் சத்தம் போடவே, பயந்து போன ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த 3 பேர் அந்தப் பெண்ணிடம் நைசாகப் பேச்சு கொடுத்துள்ளனர். அந்தப் பெண்ணுக்குத் தங்க இடம் கொடுப்பதாகக் கூறி, அனிதா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு 3 பேரும் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

2 நாட்கள் அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதனிடையே அந்த இளம்பெண் அவர்கள் 3 பேரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள கடைக்கு வந்து நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் இனியன் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டனர்.

இதனையடுத்து அந்தப் பெண்ணைக் கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் சாதிக்பாட்ஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் முதலியார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *