சடலமாக மீட்கப்பட்ட கயல் சீரியல் நடிகை: என்ன நடந்தது.?

சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவருடன் வசித்து வந்தார் நடிகை சுபாஷினி.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் படப்பிடிப்புக்காக அங்கு வசித்து வந்தார்.நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார், இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில், கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிய பின்னரே இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.

கணவன்- மனைவிக்கு இடையே ஏதும் பிரச்சனையா? குடும்ப தகராறா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *