The Exorcist: Believer, உலக அளவில் புகழ் பெற்ற  திகில் படம்!

உலக அளவில் புகழ் பெற்ற  திகில் படம் தி எக்ஸார்சிஸ்ட்.

தி எக்ஸார்சிஸ்ட், இது ஆங்கில சொல் தான். இருந்தாலும் பெயரைக் கேட்டதுமே ஒரு வித பயம் கவ்வும். 1973-ல் திகில் படம் வெளியிடப்பட்டது. திரையரங்கில்  தனியாக அமர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு ரொக்கப் பணம் பரிசு என அறிவித்து, படம் பார்க்கச் சென்றவர்கள் இறந்த சம்பவங்கள் அயல் நாடுகள் மட்டுமல்லாது, இந்தியா, என்ன தமிழ்நாட்டிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

வில்லியம் ஃபிரைட்கினின் 1973 ஆம் ஆண்டு தலைசிறந்த படைப்பான தி எக்ஸார்சிஸ்ட் தத்ரூபமான காட்சிகளைக் கண்முன் நிறுத்திய அழகான திரைப்படம். உலக அளவில் மொழி தெரியாதவர்களும் கூட ரசித்துப் பார்த்த  படம். இரண்டாம் பாகம் எனும் பெயரில் அதன் தொடர்ச்சியாகப் படம் எடுக்கிறேன் பேர் வழி என்கிற பெயரில் முதல் பாகத்தின் தனித்துவத்தை அழிக்கும் படியான படங்கள் எடுக்கிறார்கள்.

இது  வேதனையான விசயமாகப் படுகிறது. அசல் திரைப்படத்திலிருந்து ஒரு சிறந்த  எலன் பர்ஸ்டினை நமக்குக் காட்ட முயற்சி செய்து தோல்வி தான் கண்டுள்ளது.  அவரது படைப்பில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை.பர்ஸ்டினின் கதையை இன்னும் சிறப்பாகக் காட்ட முனைந்து  மோசமாக எடுத்துள்ளனர். ஏஞ்சலா மற்றும் கேத்தரின் என்ற புதிய இயக்குனர்கள் திகில் படமாக எடுக்காமல் ஆன்மீகம் அதிகம் இடம் பெற்றுமாறு எடுத்துள்ளனர்.

திகில் படம்  என்றால், பயம் தான் மையம். ஆனால் அந்தப் பயமே இல்லாமல் படம் செல்கிறது.அசல்  எக்ஸார்சிஸ்ட். 100 சதவீதம். இரண்டாம் பாகம் 10 சதவீதம் கூட இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *