
ஆபாச ஆடையுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகை உர்ஃபி ஜாவேத் கைது!
மும்பை: மும்பையில் பொது இடத்தில் ஆபாச ஆடையுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகை உர்ஃபி ஜாவேத்தை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல நடிகை உர்ஃபி ஜாவேத், பொது இடங்களுக்கு செல்லும் போது அரைகுறை ஆடையுடன் செல்வது வழக்கம். இவருக்கு என்று தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் மும்பையின் பசுமை உணவகத்தில் டிபன் சாப்பிடுவதற்காக உர்ஃபி ஜாவேத் வந்தார். அவர் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தார்.
மேலாடையின் பின்பக்கம் எதுவும் இல்லை. முன்பக்கம் மட்டும் அரை குறை ஆடையுடன் காட்சியளித்தார். போதாக்குறைக்கு அங்கிருந்த புகைப்படக்காரர்களுக்கு விதவிதமான போஸ் கொடுத்தார். அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், உர்ஃபி ஜாவேத்தை நெருங்கினர். பொது இடங்களில் ஆபாசமாக உடையணிந்து செல்வது குறித்தும், அதனால் பொது இடத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் எடுத்து கூறினர். அதிர்ச்சிடைந்த நடிகை, பெண் கான்ஸ்டபிள்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவரது பதிலில் திருப்தி அடையாத இரண்டு போலீசார், உர்ஃபி ஜாவேத்தை அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். திடீரென போலீசாரால் உர்ஃபி ஜாவேத் கைது செய்யப்பட்டதால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிடைந்தனர்.
போலீசார் அவரை கைது செய்து அழைத்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் உர்ஃபியை கைது செய்தது அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
