Kovai : கொடிசியா மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன..?

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். அப்போது வழிநெடுக பாஜக தொண்டர்கள் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து, அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது,பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதியின் இந்த தவணை இன்று இந்த மேடையில் இருந்து நாடு முழுவதற்கும் ரூ. 18,000 கோடி விடுவிக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டின் விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடவுள் முருகனுக்கு தேனும், தினைமாவையும் படைக்கின்றோம். நமது சிறந்த சிறுதானிய உணவு உலகம் முழுக்க உள்ள சந்தைகளில் சென்று சேர வேண்டும் என்பதே நமது அரசின் முயற்சி” என பேசியுள்ளார். மேலும் பேசியதில் , தமிழை சிறு வயதில் கற்று இருக்கலாமே என தோன்றியதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *