அண்ணாமலை ஆவேசம்!

Advertisements

K Annamalai | Walkathon | DMK |BJP

தான் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர்… அண்ணாமலை ஆவேசம்!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று(ஆக.,01) 5வது நாள் யாத்திரையை, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது, அவர் மானாமதுரை மண்பாண்ட தொழில் கூடத்தில் மண்பாண்டங்களை செய்து பார்த்தார்.

“என் மண், என் மக்கள்” நடை பயணத்தின் நான்காம் நாளான நேற்று(ஜூலை 31) தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் 2.5 கி.மீ., நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில், 5வது நாளான இன்று(ஆகஸ்ட் 01) சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேற்கொண்டார். மண்பாண்ட கூட்டுறவு சொசைட்டியில் தொழிலாளர்களின் குறைகளை அண்ணாமலை கேட்டறிந்தார்.
இதையடுத்து, அவர் மானாமதுரையில் புகழ்பெற்ற கடம் இசைக்கருவியை இசைத்துப் பார்த்தார். அதேபோல் மண்பாண்ட தொழில் கூடத்தில், அண்ணாமலை மண்பாண்டங்களை செய்து பார்த்தார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரையை மேற்கொண்டார்.

K Annamalai | Walkathon | DMK |BJP

மானாமதுரையில் மக்கள் மத்தியில் அண்ணாமலை திறந்தவேனில் நின்று உரையாற்றியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதேபோல், மத்தியில் பிரதமர் மோடி 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது.

திமுகவினர் யாத்திரை நடத்தினால் ‘என் மகன் என் பேரன்’ என்று சொல்லி இருப்பார்கள். இதை நாம் கடந்த 27 மாதங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.டாஸ்மாக் வருமானம் இன்னும் அதிகமாக வேண்டும் எனத் திமுக நினைக்கிறது. மானாமதுரையில் பானை செய்யும் தொழில் புகழ் பெற்றது. திருக்குறள் நூல் பிரதமருக்கு மிகவும் பிடித்தமானது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *