வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்..!

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ்  தனது 89 ஆவது வயதில் காலமானார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார். 1968-இல் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் போட்டியின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய சோபர்ஸ்க்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜாம்பவான் டொனால்ட் பிராட்மேன், சோபர்ஸ்-ஐ மிகச்சிறந்த கிரிக்கெட்டர் என வர்ணித்துள்ளார்.

1954 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சோபர்ஸ் 8 ஆயிரத்து 32 ரன்களையும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், 1965 முதல் 1972 வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அவர், 39 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பதிவு செய்தார்.

ஆண்கள் கிரிக்கெட்டில் ஐசிசி  வழங்கும் மிக உயரிய வருடாந்திர விருதான ‘சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது’ இவரது பெயரிலேயே வழங்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *